நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காதலனால் கைவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து மரணம்

பாயான் லெப்பாஸ்:

காதலனால் கைவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து மரணமடைந்தார்.

தென்மேற்கு மாவட்ட போலிஸ் தலைவர் சசாலி ஆடம் இதனை தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள ஒரு காண்டோமினியத்தின் 28ஆவது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக நம்பப்படும் 20 வயதுடைய ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

இரவு 9 மணியளவில் பொதுமக்களில் ஒருவரால் காண்டோமினியம் வாகன நிறுத்துமிடத்தில் அந்தப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட பெண் ஐந்து மாத கர்ப்பிணி ஆவார். அவரது காதலரால் விட்டுச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆனால் இது தொடர்பில் மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset