நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா சுல்தானை அணுக மேடையில் ஏறிய பெண் தஞ்சோங் ரம்புத்தான் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்: போலிஸ்

ஈப்போ:

பேரா சுல்தானை அணுக மேடையில் ஏறிய பெண் தஞ்சோங் ரம்புத்தான் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்.

பேரா போலிஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் இதனை தெரிவித்தார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பேரா மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்டம் 2025 இன் போது, ​​பிரதான மேடையில் ஏறி பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷாவை பெண் ஒருவர் அணுக முயற்சித்தார்.

சம்பந்தப்பட்ட பெண் இங்குள்ள தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பஹாகியா உலு கிண்டா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்.

மூன்று நாள் காவல் காலம் முடிவடைந்த பின்னரும், 41 வயதான சந்தேக நபர் மீது இன்னும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை.

போலிஸ் அடுத்த நடவடிக்கைக்காக சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தடுப்பு காவல் நேற்றுடன்  முடிவடைகிறது.

மேலும் மனநலச் சட்டம் 2001 (சட்டம் 615) இன் விதிகளின்படி சந்தேக நபரை மேலும் கண்காணிப்பதற்காக சம்பந்தப்பட்ட மருத்துவமனையை பரிந்துரைத்துள்ளோம்.

மேலும் இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset