நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனப் பெண்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக மூன்று நபர்களை எம்சிஎம்சி விசாரித்தது

சைபர்ஜெயா:

சீனப் பெண்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக மூன்று நபர்களை எம்சிஎம்சி விசாரித்தது.

முகநூல், டிக் டாக் வாயிலாக இனவெறி கூறுகளைக் கொண்ட போலி பதிவுகள் தொடர்பாக மேலும் மூன்று நபர்களிடமிருந்து எம்சிஎசி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

இந்தப் போலிப் பதிவு, சமீபத்தில் ஈப்போவில் நடந்த பேரா மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது ஒரு பெண் முக்கிய மேடையில் எழுந்த சம்பவத்துடன் தொடர்புடையது.

எம்சிஎம்சி இந்த செயலை ஒரு சீனப் பெண் செய்ததாகக் கூறும் பதிவு உண்மைக்குப் புறம்பானது என்று கூறியது.

அதன் படி, இந்த அறிக்கை சமூகத்தினரிடையே இன பதற்றத்தையும் எதிர்மறையான கருத்துக்களையும் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது என அது கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset