செய்திகள் மலேசியா
துர்நாற்றம் வெளிப்படுத்திய மர்ம மரணம்
பப்பார்:
கடந்த புதன்கிழமை கிணாருட் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் துர்நாற்றம் காரணமாக அங்குள்ளவர்கள் செய்த புகாரையடுத்து ஆடவர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரவு 10.30 மணியளவில் 32 வயதுடைய ஒரு ஆண் தன் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார்.
மலேசிய தீயணைப்பு, மீட்பு துறையின் (JBPM) உதவியுடன் போலிசார் பூட்டிய கதவைத் திறந்து வீட்டில் உயிரிழந்த நிலையில் உள்ளவரைக் கண்டெடுத்தனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில் எந்த குற்றவியல் சாட்சியமும் தெரியவில்லை. இறந்தவரின் தனிப்பட்ட பொருட்கள் அங்கு உள்ளன," பப்பார் மாவட்ட காவல் தலைவர், சூப்பரிண்டெண்ட் ஹெரியான் முஹம்மத் தாஹிர் தெரிவித்தார்.
பிறகு, இறந்தவரின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக பப்பார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
"இப்போதைக்கு சம்பவம் திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பவத்தைப் பற்றி தகவல்கள் உள்ளவர்கள் பப்பார் மாவட்ட காவல் நிலையம் (IPD) அல்லது அருகிலுள்ள காவல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 2:06 pm
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை கொன்ற ஆடவர்
March 13, 2026, 2:05 pm
திரெங்கானு அரசு ஊழியர்களுக்கு நோன்புப்பெருநாள் சிறப்பு உதவி
March 13, 2026, 1:22 pm
பெரித்தா ஹரியானுடன் கைகோர்த்த மலாயா பல்கலைக்கழகம்: 500 பேருக்கு இலவச நோன்பு கஞ்சி
March 13, 2026, 12:50 pm
புதிய பெயர் பெறும் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கம்
March 13, 2026, 12:44 pm
ஜொகூர் இஸ்லாமிய சமயத் துறையின் அதிரடி சோதனை: கள்ள உறவில் சிக்கிய காதல் ஜோடி
March 13, 2026, 12:43 pm
மீன் விலை உயர்த்தப்படக்கூடாது: மலேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம்
March 13, 2026, 12:41 pm
போர் பதற்றத்திற்கு மத்தியில் கடல் பணியில் 18 மலேசியர்கள்
March 13, 2026, 11:12 am
