செய்திகள் மலேசியா
பெரித்தா ஹரியானுடன் கைகோர்த்த மலாயா பல்கலைக்கழகம்: 500 பேருக்கு இலவச நோன்பு கஞ்சி
கோலாலம்பூர்:
மலாயா பல்கலைக்கழகத்தின், இஸ்லாமிய ஆய்வு புலத்தில் அமைந்துள்ள அல்-ஜாமியா தொழுகை இல்லத்தில், 'பெரித்தா ஹரியான்' நாளிதழ், மலேசிய திவால்நிலைத் துறை இணைந்து நடத்திய 'செமாராக் ரமலான்' நிகழ்ச்சி மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.
ரமலான் மாதத்தின் புனிதத்தைப் போற்றும் வகையில் சுமார் 100 பேர் இதில் பங்கேற்றனர். இந்தச் சிறப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக, இன்று காலை 7 மணி முதலே பல்கலைக்கழகப் பணியாளர்களும் செய்தியாளர்களும் ஒன்றிணைந்து கூட்டுப்பணியாக 'புபூர் லம்புக்' எனப்படும் நோன்புக் கஞ்சியைத் தயாரித்தனர்.
சுமார் 500 பொட்டலங்கள் தயாரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய உணவு, பிற்பகல் 2 மணி முதல் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 'ஜாஸ்மின் ஃபுட் கார்ப்பரேஷன்' நிறுவனம் இதற்குத் தேவையான உணவுப் பொருட்களை உபயமாக வழங்கியது.
இந்நிகழ்வில் மலாயா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ ஸ்ரீ டாக்டர் நூர் அசுவான் அபு ஒஸ்மான், பெரித்தா ஹரியான் குழுமத்தின் ஆசிரியர் சுல்கிப்ளி ஜலில், முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ரமலான் காலத்தின் பகிர்வு மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த முயற்சி, ஊடகத் துறைக்கும், அரசு அமைப்புகளுக்கும், பல்கலைக்கழக சமூகத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நோன்புக் கஞ்சி தயாரிக்கும் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதோடு, சமூகத்தில் ஒற்றுமையையும் ஒருவருக்கொருவர் உதவும் பண்பையும் வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 2:06 pm
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை கொன்ற ஆடவர்
March 13, 2026, 2:05 pm
திரெங்கானு அரசு ஊழியர்களுக்கு நோன்புப்பெருநாள் சிறப்பு உதவி
March 13, 2026, 2:01 pm
துர்நாற்றம் வெளிப்படுத்திய மர்ம மரணம்
March 13, 2026, 12:50 pm
புதிய பெயர் பெறும் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கம்
March 13, 2026, 12:44 pm
ஜொகூர் இஸ்லாமிய சமயத் துறையின் அதிரடி சோதனை: கள்ள உறவில் சிக்கிய காதல் ஜோடி
March 13, 2026, 12:43 pm
மீன் விலை உயர்த்தப்படக்கூடாது: மலேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம்
March 13, 2026, 12:41 pm
போர் பதற்றத்திற்கு மத்தியில் கடல் பணியில் 18 மலேசியர்கள்
March 13, 2026, 11:12 am
