நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரெங்கானு அரசு ஊழியர்களுக்கு நோன்புப்பெருநாள் சிறப்பு உதவி

கோலா நெருஸ்:

 திரெங்கானு மாநில அரசு, நோன்புப்பெருநாள் - அய்டில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு மாநிலத்தில் பணியாற்றும் 14,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு RM500 மதிப்பில் சிறப்பு நிதி உதவி (Bantuan Khas Kewangan – BKK) வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த உதவி, அரசு ஊழியர்கள் ரமலான் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு இந்த உதவி அவர்களின் செலவுகளைக் குறைப்பதற்காக வழங்கப்படுகிறது என்று திரெங்கானு முதலமைச்சர், டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சுரி மொக்தார் தெரிவித்தார்.

மேலும், அனைத்து அரசு ஊழியர்களின் பணிகளைப் பாராட்டும் வகையிலும் இந்த உதவி அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

“சிறப்பு உதவி வியாழன் வழங்கப்பட்டுள்ளது, இது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அய்டில்ஃபித்ரி கொண்டாட்டத்திற்கான தயாரிப்பில் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் தேசிய திரெங்கானு மாணவர் சங்கத்தின் (Permata) பேரவைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மரியாதை, இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்த ஆண்டில் பொதுப் பணம் பயன்படுத்தி அய்டில்ஃபித்ரி சிறப்பு திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியை நடத்தப்படாதது குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்த முடிவை தாம் ஆதரிப்பதாகவும் மாநில அளவிலும் இது பொருந்தும் என்று அஹ்மத் சம்சுரி கருத்து தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset