நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளி திறந்த வெளி மண்டபம் கட்டுவதற்கு ஒய்டிஎல் நிறுவனம் 450,000 ரிங்கிட் வழங்கியது

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப் பள்ளியில் திறந்த வெளி மண்டபம் கட்டுவதற்கு திறந்த நிறுவனம்  4 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை வழங்கியது.

385 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு கடந்த 2 ஆண்டுகளாக திறந்த வெளி மண்டபம் கட்ட வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டு வந்தது.

போக்குவரத்து அமைச்சரும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோனி லோக் முயற்சியில் திறந்த நிறுவனத்திடமிருந்து 450,000 ரிங்கிட் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி புசாரிடம் இருந்து  30,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. 

ஆகவே, அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் அரசாங்கம் பல நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 ஆனால், குறிப்பிட்ட கால கட்டத்தில் அனைத்து விண்ணப்பத்தையும் ஈடுகட்ட வேண்டும் என்றால் சுலபம் இல்லை.

ஆகவே, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் நிதியுதவி மூலம் தமிழ்ப்பள்ளிகளின் நிலமையை மாற்றியமைத்து மாணவர்களுக்கு ஒரு சூழ்நிலையை ஏற்ப்படுத்தி தர முடியும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset