நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாமான் தாசேக் தித்திவங்சாவில் Pesta Budaya Malaysia கொண்டாட்டம்

கோலாலம்பூர்:

மலேசியத் தினத்தை முன்னிட்டு சுற்றுலா துறை அமைச்சின் ஆதரவோடு கலை, கலாச்சார ராதா கிருஷ்ணன் பைன்ட் ஆர்ட்ஸ் ஏற்பாட்டில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தாமான் தித்தி வங்சாவில் Pesta Budaya Malaysia கொண்டாட்டம் விழா மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

தினசரி காலை 9.00 மணி முதல் இரவு 11 மணிவரை நடைபெறும் இந்த கொண்டாட்ட விழாவை காண 20,000 பேர் படையெடுப்பாளர்கள் என்று கொண்டாட்டம் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் நளினி தெரிவித்தார்.

நாட்டின் புகழ்பெற்ற கலைஞர் டத்தோ எலிகேட் ஆறுமுகம், சந்தேஷ், டார்க்கி, லோக்காப் மற்றும்  மண்ணின் மைந்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று பொதுமக்களை மகிழ்விப்பார்கள்.

இந்திய பாரம்பரிய கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிலம்பாட்டம், உருளிமேளம், பாரம்பரிய இந்திய நடனங்கள் இதில் இடம் பெறுகிறது.

ஐந்து தினங்கள் நடைபெறும் இந்த விழாவில் இரண்டாயிரம் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில் கொண்டாட்டம் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  என்று அவர் சொன்னார்.

சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோ கிங் சிம், ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு வருகை புரிகிறார்கள்.

இலவசமாக நடைபெறும் இந்த கொண்டாட்டம் விழாவை காண பொதுமக்கள் திரண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset