நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா சுல்தான் சம்பந்தப்பட்ட பதிவு சம்பவம் தொடர்பாக பாஸ் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து எம்சிஎம்சி அறிக்கை பெற்றது

சைபர்ஜெயா:

பேரா சுல்தான் சம்பந்தப்பட்ட பதிவு சம்பவம் தொடர்பாக பாஸ் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து எம்சிஎம்சி அறிக்கை பெற்றது.

பேரா மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தில் சுல்தான் நஸ்ரின் ஷா சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மீறல் குறித்த சமூக ஊடகப் பதிவு தொடர்பாக, 

எம்சிஎம்சி பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹபீஸ் சப்ரியிடம் இருந்து ஒரு அறிக்கையைப் பெற்றது.

ஆகஸ்ட் 31 அன்று நடந்த நிகழ்வின் போது மேடையில் ஏறிய பெண் சீனர் என்று கூறும் இனக் கூறுகளைக் கொண்ட போலியான பதிவு என்று எம்சிஎம்சி விவரித்தது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநரால் உறுதிப்படுத்தப்பட்டபடி இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது.

மேலும் சமூகத்தினரிடையே இனப் பதற்றத்தையும் எதிர்மறையான கருத்துக்களையும் ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று எம்சிஎம்சி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset