நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேச நிந்தனை, பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பியதற்காக  2 டிக்டாக் கணக்குகளை போலிசார் விசாரிக்கின்றனர்: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

தேச நிந்தனை, பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பியதற்காக 2 டிக்டாக் கணக்குகளை போலிசார் விசாரிக்கின்றனர்.

புக்கிட் அமான் குற்ற புலனாய்வு பிரிவு இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை தெரிவித்தார்.

இரண்டு டிக்டாக் கணக்கு உரிமையாளர்கள் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைத் தூண்டி பரப்பியதாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இரண்டு டிக்டோக் கணக்கு உரிமையாளர்களை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

இதில் முதல் வழக்கு முதல் படிவ மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பானது.

இரண்டாவது வழக்கு பிரதமர் அன்வர் இப்ராஹிமை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தியதாகும்.

இரண்டு கணக்குகளின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இதனால் சந்தேக நபர்களைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளடக்கத்தின் பரவல் குறித்த விசாரணையை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் டி5 பிரிவு நடத்தி வருகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset