நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரப்பர் மர தோட்டத்தில் சிதைந்த மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது

பாலிங்:

ரப்பர் மர தோட்டத்தில் சிதைந்த மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. பாலிங் மாவட்ட போலிஸ் தலைவர் அஹ்மத் சலிமி எம்.டி. அலி இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்று காலை கோலா கெட்டில், கம்போங் பாடாங் பெசாரில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில், முழுமையாக உடையணிந்த நிலையில் சிதைந்த மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

அந்த நேரத்தில் அப்பகுதியில் ரப்பர் சீவிக் கொண்டிருந்த 43 வயதுடைய ஒருவரால் இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

ரப்பர் தோட்டத்தின் வேலிக்கு அருகில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக காலை 11 மணியளவில் அந்த நபரிடமிருந்து தனது துறைக்கு புகார்  கிடைத்தது.

காலை 11.30 மணிக்கு போலிசாருக்கு கிடைத்த புகாரின் பேரில், அதிகாரிகள்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதாக அவர் கூறினார்.

சம்பவ இடத்தில் இறந்தவரின் எலும்புக்கூட்டின் இடது பக்கத்தில் ஒரு கத்தி இருந்தது.

இறந்தவர் தொடர்பான காணாமல் போனவர்கள் பதிவேட்டைச் சரிபார்த்ததில், இறந்தவரின் மனைவி ஆகஸ்ட் 29 அன்று போலிசில் ஒரு புகார் அளித்திருப்பது தெரியவந்தது.

இறந்தவரின் மனைவியின் கூற்றுப்படி, அவரது கணவர் ஆகஸ்ட் 24 முதல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். 

அதன் பிறகு திரும்பி வரவில்லை என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset