நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்ஸ் அமைப்பில் மலேசியா முழு உறுப்பினராவதற்கு சீனா ஆதரவு: பிரதமர்

பெய்ஜிங்:

பிரிக்ஸ் அமைப்பில் மலேசியா முழு உறுப்பினராவதற்கு சீனா முழுமையான ஆதரவை தந்துள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

நேற்று நடந்த சந்திப்பின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த முன்னேற்றத்தை தெரிவித்தார்.

பிரிக்ஸ் முழு உறுப்பினராக மலேசியா பங்கேற்பதை விரைவுபடுத்துவதற்கு அதிபர் ஜி தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

உலக அரங்கில் நமது நாடு தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்க ஆதரவளித்ததற்கு இது ஒரு பெரிய மரியாதை.

தனது நான்கு நாள் சீனப் பயணத்தை உள்ளடக்கிய மலேசிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

2009 இல் உருவாக்கப்பட்ட பிரிக்ஸ், இப்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து உள்ளிட்ட 11 நாடுகளைக் கொண்டுள்ளது. 

இந்த் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மலேசியா இந்த அமைப்பில் ஒரு கூட்டாளி நாடாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset