நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாரா 3 நாட்களில் 2.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 192.4 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டனர்

புத்ராஜெயா:

சாரா உதவித் தொகை கிடைத்த  3 நாட்களில் 2.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 192.4 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டனர்.

நிதியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.

சாரா எனப்படும் அடிப்படை ரஹ்மா பங்களிப்பு பாராட்டு திட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்கு 100 ரிங்கிட் உதவித் தொகையை அரசு வழங்கியது.

கடந்த மூன்று நாட்களுக்குள் 2.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்  பயன்படுத்தி அடிப்படைத் தேவைகளை வாங்கியுள்ளனர்.

இதன் மூலம் நாடு முழுவதும் மொத்தமாக 192.4 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.

மூன்றாவது நாளில் இன்று வரை அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன.

நேற்று 1.1 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நிறைவடைந்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 50 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும்போது செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி நிலவரப்படி இது 75.3 மில்லியன் ரிங்கிட் விற்பனை மதிப்பை உள்ளடக்கியது.

ஆகஸ்ட் 31 அன்று 79% ஆக இருந்த பரிவர்த்தனை விகிதம் நேற்று 95% ஆக வெற்றிகரமாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset