நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார்

ஜாகர்த்தா:

பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோ கூறினார்.

பெருவின் லிமாவில் உள்ள தூதரகத்தில் பணிபுரியும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சக ஊழியர் ஒருவர்  அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நிகழ்ந்தது.

இந்த வழக்கு தீர்க்கப்படும் வரை முழுமையான விசாரணை நடத்துமாறு பெருவிய வெளியுறவு அமைச்சையும் உள்ளூர் போலிஸ் துறையையும் தனது தரப்பு கேட்டுக் கொண்டுள்ளோம்.

மேலும் வழக்கின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, உடலை நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு இந்தோனேசிய தூதர் ரிக்கி சுஹேந்தருக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை இரவு லின்ஸ் நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில், பாதிக்கப்பட்ட ஜெட்ரோ லியோனார்டோ பூர்பா தனது மனைவியுடன் சைக்கிளில் சென்றபோது மூன்று முறை சுடப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset