நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா கைரினாவின் மரணம் குறித்த வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது

கோத்தா கினபாலு:

ஷாரா கைரினா மகாதீரின் மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காணும் விசாரணையை கொரோனர் நீதிமன்றம் இன்று தொடங்கியுள்ளது.

இன்று சாட்சியமளிக்க பல சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி அமீர் ஷா அமீர் ஹாசன் முன்னிலையிலான விசாரணை  நடவடிக்கைகள், 

விசாரணையில் ஆர்வமுள்ள ஒரு தரப்பினராக மாற ஒரு வழக்கறிஞரின் விண்ணப்பத்துடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ டங்கன் சிகோடோலின் முடிவை அடிப்படையாக கொண்டதாகும்.

கடந்த ஆகஸ்ட் 28 அன்று வழக்கறிஞரின் விண்ணப்பத்தை விசாரித்த பிறகு விலகிய முந்தைய கொரோனர் அஸ்ரினா அஜிஸின் முடிவை ரத்து செய்தது.

மேலும் விசாரணை முழுவதும் சுமார் 70 சாட்சிகள் அழைக்கப்படுவார்கள்.

இதில் முக்கிய சாட்சிகளில் ஒருவராக மறைந்த ஷாரா கைரினாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த நோயியல் நிபுணரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset