நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசாங்கத்தின் கீழ் மித்ராவின் சீர்திருத்தங்கள் மிகவும் வெளிப்படையானவை, தெளிவாக உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

மடானி அரசாங்கத்தின் கீழ் மித்ராவின் சீர்திருத்தங்கள் மிகவும் வெளிப்படையானவை, தெளிவாக உள்ளன

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையில் மித்ரா வெற்றிகரமாக சீர்திருத்தப்பட்டது.

குறிப்பாக பி40 குழுவின் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு தெளிவான, மிகவும் வெளிப்படையான பயனுள்ள வழிகாட்டுதலுடன் செயல்படுகிறது.

பிரதமர் தலைமையின் கீழ், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்தையும் ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் மித்ரா சிறப்புப் பணிக்குழு நிறுவப்பட்டது.

முன்பை விட இப்போது மித்ரா மிகவும் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் தெரிகிறது.

மித்ராவை நோக்கி மடானி அரசு செயல்படுத்திய உண்மையான சீர்திருத்தம் இதுதான். 

முன்பு, மித்ரா அல்லது செடிக் (மித்ராவின் பழைய பெயர்) பற்றிய எந்தவொரு அரசாங்க விளக்கத்தையும் நாங்கள் அரிதாகவே கேள்விப்பட்டோம்.

ஆனால் மித்ரா தொடர்பான எந்த விஷயத்தையும் இப்போது மதானி அரசு பாதுகாக்கவில்லை. 

ஒவ்வொரு திட்டமும் பயனாளியும் முன்பைப் போலல்லாமல் மித்ரா வலைத்தளத்திலும் பட்டியலிடப்படுவார்கள்,

மேலவையில் இன்று மித்ரா தொடர்பான  13வது மலேசியா திட்டம்  மீதான விவாதத்தை நிறைவு செய்யும் போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset