நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

395 சூதாட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 328 பேரை போலிஸ் கைது செய்தது: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் 395 சூதாட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 328 பேரை போலிசார் கைது செய்தனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை தெரிவித்தார்.

கடந்த  ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் போலிஸ் நடத்திய Op Dadu Mega மூலம் நாடு தழுவிய அளவில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் சோதனை செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 395 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் உரிமம் இல்லாமல் சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட 272 வளாகங்கள் கண்டறியப்பட்டது.

மொத்தத்தில் 245 வளாகங்கள் உரிமம் இல்லாமல் பொது லாட்டரிகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்தன.

மேலும் 20 வளாகங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை வழங்குவதாகக் கண்டறியப்பட்டது.

இந்த சோதனையில் உரிமம் இல்லாமல் இயங்கும் ஐந்து குடும்ப பொழுதுபோக்கு வளாகங்களும், மற்ற இரண்டு வளாகங்கள் சூதாட்ட அழைப்பு மையங்களாக செயல்பட்டன.

இந்த சோதனையில் மொத்தம் 328 நபர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டனர்.

இதில் 286 ஆண்கள், 42 பெண்களும் அடங்குவர்.

அவர்கள் உரிமையாளர்கள், வளாகக் காவலர்கள், ஊழியர்கள், சூதாட்டக்காரர்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset