நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் 2.8 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை: பூங் மொக்தார்

கோலாலம்பூர்:

நான் 2.8 மில்லியன் ரிங்கிட் கையூட்டு  பெற்றதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை.

கினா பாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் பூங் மொக்தார் ராடின் இதனை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

யூனிட் டிரஸ்டில் 150 மில்லியன் ரிங்கிட் முதலீடு தொடர்பாக இரண்டு பப்ளிக் மியூச்சுவல் பெர்ஹாட் முதலீட்டு முகவர்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 2.8 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெறவில்லை.

மேலும் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் பணத்தைப் பெற்றதற்கான எந்த வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட உரையாடல்களையும் காட்டவில்லை.

24ஆவது அரசு தரப்பு சாட்சி (மதி அப்துல் ஹமீத்), 25ஆவது அரசு தரப்பு சாட்சி (நோர்ஹைலி அகமது மொக்தார்) ஆகிய இரண்டு முதலீட்டு முகவர்களிடமிருந்து எனக்கு பணம் செலுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

அவர்களிடமிருந்து நான் எந்தப் பணத்தையும் பெறவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset