நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா

புத்ராஜெயா:

ஆப்கானிஸ்தானை தாக்கிய 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

விஸ்மா புத்ரா எனப்படும் வெளியுறவு அமைச்சு இதனை உறுதிப்படுத்தியது.

கிழக்கு ஆப்கானிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் 6.0
ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.

இதனால் குறைந்தது 800 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பெரும் சேதம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தால் பாகிஸ்தானில் உள்ள எந்த மலேசியர்களும் பாதிக்கப்படவில்லை.

மேலும் நேற்று பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் கிழக்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய வலுவான நிலநடுக்கம்,  பல பின்னதிர்வுகளின் விளைவுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset