நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூத்த அதிகாரி உட்பட ஐந்து போலிஸ்காரர்களை எம்ஏசிசி கைது செய்தது

பட்டர்வொர்த்:

மூத்த அதிகாரி உட்பட ஐந்து போலிஸ்காரர்களை பினாங்கு மாநில எம்ஏசிசி கைது செய்தது.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை வைத்திருந்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்காததற்காக கிட்டத்தட்ட 9,000 ரிங்கிட் கையூட்டு கேட்டு பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

20 முதல் 40 வயதுக்குட்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை ஜார்ஜ்டவுனில் உள்ள பினாங்கு எம்ஏசிசி அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்திருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை செபராங் பிறையைச் சுற்றி நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில், அனைத்து சந்தேக நபர்களும் இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

சந்தேக நபர்களில் ஒருவர், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒரு மோட்டார் சைக்கிள் பட்டறையின் உரிமையாளரான ஒருவரிடமிருந்து ரொக்கமாக கையூட்டு கேட்டு பெற்றதாக நம்பப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset