நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது

சிரம்பான்:

இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை போலிசார் கைது செய்தனர்.

கடந்த வாரம் ஒரு இளம்பெண் அடையாளம் தெரியாத வீட்டில் நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் நேற்று 16 முதல் 19 வயதுடைய நான்கு பேரை போலிசார்  கைது செய்தனர்.

இதனை சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் முகமது ஹட்டா சே தின் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அதிகாலை 3.21 மணியளவில் 16 வயது இளம் பெண் ஒருவர் செனாவாங் போலிஸ் நிலையத்தில் ஒரு கும்பலால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறி  புகார் அளித்தார்.

இப்புகாரை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 375பி கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset