நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பன்முகத்தன்மை, நம்பிக்கையுடன் உலகளாவிய நிர்வாகத்தை சீர்திருத்துங்கள்: பிரதமர்

தியான்ஜின்:

பன்முகத்தன்மை, நம்பிக்கையுடன் உலகளாவிய நிர்வாகத்தை சீர்திருத்துங்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

தற்போதுள்ள பலதரப்பு அமைப்புகளின் அட்டூழியங்கள், ஆக்கிரமிப்புகளைத் தடுக்க முடியாததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்பில் அவசர சீர்திருத்தம் தேவைப்படுகிறது.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்ளும் ஆர்வத்தைக் கொண்டிருப்பதாக இனி பார்க்கப்படவில்லை.

உண்மையில் இலட்சியவாதத்திற்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

அபிலாஷைகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் ஒரு கவலையளிக்கும் இடைவெளி உள்ளது.

காரணம் இது ஒரு இடைவெளியை உருவாக்கி, நடவடிக்கை இல்லாமல் அட்டூழியங்களைச் செய்ய அனுமதிக்கிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிநிலை மாநாட்டில் பேசும்போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

இந்த உச்சநிலை மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset