நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மெர்சிங் வட்டாரத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது: நட்மா இயக்குநர்

ஜொகூர்பாரு:

ஜொகூர் சிகாமட்டை தொடர்ந்து மெர்சிங் வட்டாரத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்சா இதனை கூறினார்.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) தீபகற்ப மலேசியாவில் உள்ள மெர்சிங் மண்டலத்தில் நிலநடுக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

இதுவரை ஜொகூரில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மிகவும் பலவீனமான நிலநடுக்கங்கள்.

அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

ஜொகூரில் உள்ள செகாமட் பகுதியைச் சுற்றி 24 ஆம் தேதி முதல் நேற்று வரை 2.5 முதல் 4.1 வரை ஏற்பட்ட ஐந்து பின்அதிர்வுகளுடன் ஒரு பலவீனமான நிலநடுக்கத்தையும் மெட் மலேசியா பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஜொகூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜொகூர், நெகிரி செம்பிலன், மலாக்கா, தெற்கு பகாங்கைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset