நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இறுதியாட்டத்தில் கோலடிக்க தவறிய மெஸ்ஸி: லீக் கிண்ணத்தை இழந்தது இந்தர்மியாமி

சியாட்டில்: 

லீக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இந்தர்மியாமி அணியை வீழ்த்தி, சியாட்டில் சவுண்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அமெரிக்காவில் மேஜர் லீக் சாக்கர், லிகா எம்எக்ஸ் கிளப்ஸ் கால்பந்து அணிகள் இடையிலான லீக் கிண்ண கால்பந்து போட்டி நடந்தது.

இதன் இறுதிப் போட்டியில், அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இந்தர்மியாமி அணியும், சியாட்டில் சவுண்டர்ஸ் அணியும் மோதின.

போட்டியின் துவக்கம் முதல், சியாட்டில் அணி வீரர்களின் ஆதிக்கமே காணப்பட்டது.

இதில் இந்தர்மியாமி அணி வீரர்களால் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியாமல் போனது. 

அதனால், 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற சியாட்டில் சவுண்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

குறிப்பாக லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் கூட அடிக்காதது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset