நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாரா உதவித் தொகை 2ஆவது நாளில் 91 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டது

கோலாலம்பூர்:

சாரா 100 ரிங்கிட் உதவித் தொகை பெற்ற 2ஆவது நாளில் கிட்டத்தட்ட 91 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.

மை காசே அறக்கட்டளை ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

இன்று மாலை 5 மணி நிலவரப்படி இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட 600,000 பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 20% அதிகமாகும்.

புள்ளி விவரங்களின் அடிப்படையில் இரண்டு நாள் திட்டத்தில் மொத்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை 1.45 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் 91 மில்லியன் ரிங்கிட் செலவாகி உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset