நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இறக்குமதி உரிமங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக 14 நிறுவனங்கள் மீது எம்ஏசிசி விசாரணை: 218 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வங்கிக் கணக்குகள் முடக்கம்

புத்ராஜெயா:

இறக்குமதி உரிமங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக 14 நிறுவனங்கள் மீது எம்ஏசிசி விசாரணையை தொடங்கியுள்ளது.

இதன் மூலம் 218 மில்லியன் ரிங்கிட்  மதிப்புள்ள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

சிகரெட், புகையிலை, சுருட்டுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பல இறக்குமதி உரிமங்களை ரத்து செய்துள்ளது.

செல்லுபடியாகும் இறக்குமதி உரிமங்களை தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 14 நிறுவனங்களை குறிவைத்து Op Sikaro மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விசாரணையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செல்லுபடியாகும் உரிமங்கள் என்ற போர்வையில் செயல்பட்டது.

ஆனால் உண்மையான வரிகளைச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக சுங்கக் குறியீடுகள், தயாரிப்பு விவரங்களை மாற்றுவது உள்ளிட்ட தவறான அறிவிப்பு தந்திரங்களைப் பயன்படுத்தப்பட்டது.

எம்ஏசிசி சிறப்பு செயல்பாட்டுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ முகமது ஜம்ரி ஜைனுல் அபிடின் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset