நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொங்லாவில் துப்பாக்கி, நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் மலேசியர் கைது

சொங்லா:

சொங்லாவில் துப்பாக்கி, நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் மலேசியர் கைது செய்யப்பட்டார்.

நேற்று சொங்லாவின் சடாவோவில், காரில் இரண்டு எம்4 ரைபிள் பீப்பாய்கள், 450க்கும் மேற்பட்ட தோட்டாக்களை எடுத்துச் சென்ற மலேசிய நபர் தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

40 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர், சம்னக் காமில் உள்ள பான் டான் நோக் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜாலான் காஞ்சனாவனிட்டில் உள்ள சாலைத் தடுப்பில் மாலை 5.35 மணியளவில் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலேசிய பதிவு எண்ணைக் கொண்ட ஒரு கியா ஆப்டிமா காரை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த  அறிக்கை கூறுகிறது.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset