நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியன் பைக்கர்ஸ் வருகையோடு களைகட்டிய ரினி தமிழ்ப்பள்ளியின் சுதந்திர தின அணிவகுப்பு

ஜொகூர்பாரு:

ரினி தமிழ்ப்பள்ளி இளஞ்சிட்டுகளின் நாட்டுப்பற்று முழக்கத்தோடு களைகட்டியது பள்ளி அளவிலான 68ஆவது சுதந்திர தின அணிவகுப்பு. 

பள்ளி அளவிலான இந்நிகழ்வில் இந்தியன் பைக்கர்ஸ் குழுவினர் கலந்து சிறப்பித்தனர்.  

பள்ளியின் தலைமையாசிரியை சு.தமிழ்ச்செல்வி வரவேற்புரை வழங்கி மாணவர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார். 

அதனைத் தொடர்ந்து, இந்தியர் பைக்கர்ஸ் குழுவினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் பிரகாஷ், பள்ளி நிர்வாகக் குழுவினர் இன்றைய நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து மாணவர்களோடு இணைந்து நாட்டுப்பற்றுப் பாடல்களைப் பாடி இந்நிகழ்விற்குச் சிறப்புச் சேர்த்தனர். 

ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள வசிப்பிடத்தை மாணவர்கள் கண்கவரும் பாரம்பரிய உடைகளை அணிந்து, இந்தியன் பைக்கர்ஸ் புடைசூழ வலம் வந்தனர். 

சிலர் தேசிய தினக் கொண்டாட்டத்தை வெளிக்கொணரும் வகையில் தேசியக் கொடிகளை அசைத்தவாறும் மெர்டெக்கா! மெர்டெக்கா! என முழக்கமிட்டு மிகுந்த ஆர்வத்துடன் வலம் வந்தனர். 

இந்த அணிவகுப்பில் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள், பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் என அனைவரும் மாணவர்களுடன் இணைந்து வசிப்பிடத்தைச் சுற்றி வலம் வந்தது இன்றைய நிகழ்வின் முத்தாய்ப்பாக அமைந்தது.

இறுதியாக, தலைமையாசிரியை அவர்கள் இன்றைய தேசிய தின அணிவகுப்பினைச் சிறப்பாக ஏற்பாடு செய்த பள்ளியின் துணைத்தலைமையாசிரியர்கள், இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர், ஆசிரியர்கள், பள்ளியின் பெற்றோர் ஆசிரிய சங்கச் செயலவை உறுப்பினர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset