நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பசுமைச் சிந்தனையில் சுதந்திர தினம்: நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளியின் அசத்தலான முயற்சி

ஷாஆலம்:

நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளியில் 68ஆவது தேசிய தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில், கிள்ளான் மாவட்ட கல்வி இலாகாவின் துணை இயக்குனர் லுட்ஃபி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 

மேலும், முன்னாள் இராணுவ வீரர், சிலாங்கூர் பள்ளி மேலாளர்  வாரிய சங்கத் தலைவர் தனபாலன், பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவர் ஹேமநாதன் தலைமையிலான செயலவை உறுப்பினர்கள், பள்ளி மேலாளர் வாரிய சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பள்ளியின் தலைமையாசிரியர் சூரியகுமாரி, துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்புடன் இந்த விழா சிறப்பாக நடந்தேறியது. 

மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

நிகழ்வின் சிறப்பு அம்சமாக 68ஆவது தேசிய தினத்தைக் குறிக்கும் விதமாக, 1868 நீர் புட்டி மூடிகளை மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த ஒரு மாத காலமாக சேகரித்து, 68 என்ற எண்ணில் ஒட்டி பிரம்மாண்ட இராட்சத வடிவத்தை உருவாக்கி அசத்தினர். .

இது மலேசியக் கொடி வண்ணங்களான நீலம், வெள்ளை, சிவப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மாணவர்களிடையே பசுமை சிந்தனையையும் ஊக்குவிக்கும் விதமாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களின் வண்ணமய ஆடைகளும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்களும் நடனங்களும் அனைவரையும் கவர்ந்தது. 

இதனுடன் மாணவர்களின் கலைப்பணிகள், ஆவணக் கண்காட்சிகள் மற்றும் தனிப்பட்ட கற்றல் சாதனைகளும் விழாவை மேலும் சிறப்பாக ஆக்கின.

இந்த விழா  பள்ளி, பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும்  சமூகப் பொறுப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கூட்டிணைப்பு ஆகியவற்றை வளர்க்கும் ஒரு முக்கியமான அடித்தளமாக அமைந்தது. 

இது போன்ற நிகழ்வுகள் மாணவர்களுக்கு கல்வியறிவோடு கூடிய வாழ்க்கைமுறைப் பண்புகளையும் ஊட்டுகின்றன என்பதும் மெய்பிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset