நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலாப நோக்கமற்ற சுயம்வரம் இந்து மணமுறை திட்டம்; நான்காவது வெற்றி பதிவு செய்தது: டத்தோ முருகையா

பட்டர்வொர்த்:

மலேசியாவின் பல பகுதிகளிலிருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட சமீபத்தில் நிறைவுற்ற சுயம்வரம் மணமுறை நிகழ்ச்சி, திருமணத்தை நோக்கமாகக் கொண்ட நபர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பை வழங்கி, தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் சிறப்புடன் நிறைவடைந்தது. 

இந்நிகழ்ச்சி பினாங்கு இந்து இயக்கம், பினாங்கு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. 

பொதுமக்களின் நிறைவான ஆதரவுதான் இந்நிகழ்ச்சி வெற்றியின் முக்கியக் காரணம் என பினாங்கு இந்து இயக்கத்தின் தலைவர் டத்தோ பி. முருகையா கூறினார்.

சுயம்வரம் என்பது இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்திருந்த பாரம்பரிய மணமுறை முறையைக் குறிக்கும் சொல். 

இம்முறையை மறக்காமல் காக்க வேண்டும் என்பதற்காக பினாங்கு இந்து இயக்கம் இதனை மீண்டும் கொண்டு வந்தது. காலப்போக்கில், இம்முறை நவீன காலத்திற்கேற்ப மாற்றங்களுடன் முன்னெடுக்கப்படுகிறது.

இதுவரை மொத்தம் 10 திருமணங்கள் இத்திட்டத்தின் வாயிலாக நிறைவேறியுள்ளன.

இவ்வாண்டு இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 30ஆம் சனிக்கிழமை, பினாங்கு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. 

மொத்தம் 112 திருமண விருப்பமுள்ள ஆண்களும் பெண்களும் தங்களது பெற்றோர்கள், குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 

கூடுதலாக 10 பேர் நேரடியாக பதிவு செய்து கலந்து கொண்டனர். 

பங்கேற்பாளர்களுக்கு அவர்களது சுயவிவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அதன்பின் பாரம்பரிய முறைக்கு ஏற்ப ஜோதிடர்களால் ஜாதக பொருத்தம் பரிசீலிக்கப்பட்டது. 

ஜோதிடர்கள் அனுமதி வழங்கிய பிறகு, இரு குடும்பத்தினரும் சந்தித்துத் திருமண விவாதங்களை நடத்தினர். 

பெரும்பாலான குடும்பங்கள் திருப்தி தெரிவித்ததுடன், விரைவில் விவரங்களை ஏற்பாட்டாளர்களுக்கு அறிவிப்பதாகக் அவர் கூறினர்.

இந்நிகழ்ச்சியை பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ  சுந்தராஜூ சோமு தொடக்கி வைத்தார்.

ஜெத்தோங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நேதாஜி ராயர், தமது உரையில், 

இத்திட்டத்தின் மூலம் திருமணத்தில் இணையும் தம்பதிகளுக்கு பினாங்கு இந்து நிதியமையத்தின் கீழுள்ள ஆலயங்களில் மணமக்கள் மண்டப வாடகைக்குத் தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். 

செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset