நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தர்மம் தலை காக்கும் இயக்கத்தின் மெர்டேக்கா தின இன்னிசை விழா: விமரிசையாக நடைபெற்றது

கோலாலம்பூர்:

தர்மம் தலை காக்கும் இயக்கத்தின் ஏற்பாட்டில் மெர்டேக்கா இன்னிசை இரவு விழா நேற்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

தர்மம் தலை காக்கும் இயக்கத்தின் தலைவர் என்.மகேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த விழாவை கலைஞர் ராஜா ரவாங் வழிநடத்தினார்.

கண் பார்வையற்றோர் சங்கத்தின் சார்பில் அதன் உறுப்பினர்கள் மற்றும் ரவாங் தன்னிலை பயிற்சி மையத்தின் தலைவர் பிரான்சிஸ் சிவா சார்பில் மாற்றுத் திறனாளிகள் கலந்து சிறப்பித்தனர்.

பூச்சோங் சுத்த சன்மார்க்க பள்ளி மாணவர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

சபா இந்தியர் சங்கத்தின் தலைவர் டத்தோ நாகரத்தினம் தம்பதியர்,  டத்தோ மனோகரன்  கலந்து கொண்டனர்.

தர்மம் தலை காக்கும் இயக்கத்தின்  தலைவர் மகேந்திரன் அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலிகள், மருத்துவ சிகிச்சை நிதி, கல்வி நிதியை  வழங்கி பேருதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற இந்த விழா வெற்றி பெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மகேந்திரன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு தர்மம் தலை காக்கும் இயக்கம் பல வகைகளில் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் நேற்று 68 ஆவது மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு தர்மம் தலை காக்கும் இயக்கத்தின் சார்பில் ஆறு மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset