நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லோரி ஓட்டுநர், உரிமையாளர்கள் பிரச்சினைக்கு பதில் இல்லையென்றால் நாடு முழுவதும் லோரிகள் ஓடாது: டத்தோ கலைவாணர்

பெட்டாலிங்ஜெயா:

லோரி ஓட்டுநர், உரிமையாளர்கள் பிரச்சினைக்கு பதில் இல்லையென்றால் நாடு முழுவதும் லோரிகள் ஓடாது.

நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை கூறினார்.

நாடு முழுவதும் உள்ள லோரி ஓட்டுநர்கள் உரிமையாளர்களுக்கு இடையிலான சிறப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக ஜேபிஜேவின் விதிமுறைகளால் லோரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

லோரியில் கூடுதல் எடையை ஏற்றினால் சம்பந்தப்பட்ட லோரி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது.

அந்த லோரிக்கு அதிகமான அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்தவில்லை என்றால் லோரி ஏலத்திற்கு  விடப்படுகிறது.

இதே போன்று லோரி ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் வேறு வேலை கூட பார்க்க முடியவில்லை.

இதன் அடிப்படையில் தான் இம்மாநாடு நடத்தப்பட்டு 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த 12 தீர்மானங்களும் மகஜராக போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக்கிற்கு வழங்கப்படும்.

இதற்கு அமைச்சர் 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் நாடாளுமன்றத்தின் முன் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

அதே வேளையில் நாடு முழுவதும் லோரிகள் ஓடாது என டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset