
செய்திகள் உலகம்
ஊழியரை ஏமாற்றிய நிறுவனம்: 4.3 லட்சம் திர்ஹம் வழங்க உத்தரவிட்ட அபுதாபி நீதிமன்றம்
அபுதாபி:
அபுதாபியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு முன்னாள் ஊழியர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ஆதரவாக அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில், ஊழியரின் நிலுவைத் தொகையான 434,884 திர்ஹம் அந்த திறுவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் தங்கள் முழு சேவை காலத்திற்கும் முழு விடுமுறை ஊதியத்திற்கு (vacation pay) உரிமையுடையவர்கள் என்பதையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு பதிவுகளின் படி, அந்த ஊழியர் ஜனவரி 2018 முதல் ஜூன் 2024 வரை அந்நிறுவனத்தில் பணிபுரிந்தார், அடிப்படை சம்பளம் 36,000 திர்ஹம் மற்றும் இலாபப் பகிர்வு உட்பட மொத்தம் 60,000 திர்ஹம் ஊதியத் தொகுப்பைப் பெற்றுள்ளார். அவரது சேவை முடிந்ததும், நிலுவையில் உள்ள ஊதியம், விடுமுறை ஊதியம், பணிநீக்க கிராஜுவிட்டி, அறிவிப்பு ஊதியம், கமிஷன்கள் மற்றும் தாமதமாக செலுத்தும் வட்டி ஆகியவற்றைக் கோரி முதலாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
ஆரம்பத்தில், இந்த வழக்கை விசாரித்த முதல் நிகழ்வு நீதிமன்றம் (Abu Dhabi Court of First Instance) அவருக்கு 323,400 திர்ஹம் ரொக்கத்தை வழங்குமாறு முதலாளிக்கு உத்தரவிட்டது. இந்தத் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செலுத்தப்படாத ஊதியம், கிராஜுவிட்டி மற்றும் விடுமுறை ஊதியத்தை உள்ளடக்கியது. எனவே, தீர்ப்பில் திருப்தி அடையாத ஊழியர் வழக்கை மேல்முறையீடு செய்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்ய அபுதாபி நீதிமன்றத்தால் ஒரு நிபுணர் நியமிக்கப்பட்டார். நிபுணரின் அறிக்கையைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஊழியருக்கு வழங்க வேண்டிய தொகையை 379,400 திர்ஹம் ஆக உயர்த்தியது.
ஆதாரம்: கலீஜ் டைம்ஸ்
தொடர்புடைய செய்திகள்
September 3, 2025, 4:53 pm
இலங்கைக்கு சுற்றுலா: இந்தியா்கள் மீண்டும் முதலிடம்
September 3, 2025, 1:24 pm
காஸா மக்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசேர்த்த சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள்
September 3, 2025, 1:06 pm
துபாயில் ஏன் வெவ்வேறு நிற ரூஃப் கொண்ட டாக்சிகள் வலம் வருகின்றன?
September 3, 2025, 10:58 am
இந்தோனேசியாவின் இலவச உணவு திட்டம் 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்பு
September 3, 2025, 9:04 am
பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 2, 2025, 7:53 pm
மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
September 2, 2025, 5:25 pm
பிரபல மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்கள்: ஆஸ்திரேலிய மாநிலம் தடை
September 2, 2025, 11:31 am
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீர் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்: சிங்கப்பூர் NEA அறிவிப்பு
September 1, 2025, 9:10 pm