நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

534 நகர்ப்புற புதுப்பித்தல் இடங்களை மாநில அரசுகள் கெசட் செய்துள்ளன: கோர் மிங்

கோலாலம்பூர்:

கிட்டத்தட்ட 534 நகர்ப்புற புதுப்பித்தல் இடங்களை மாநில அரசுகள் கெசட் செய்துள்ளன.

வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் இதனை கூறினார்.

நகர்ப்புற புதுப்பித்தல் செயல்படுத்துவதற்கான முன்மொழியப்பட்ட பகுதிகள், சில கட்சிகளால் இப்போது எழுப்பப்பட்டு வருகின்றன.

அவை உண்மையில் எதிர்க்கட்சி மாநிலங்கள் உட்பட மாநில அரசுகளால் கெசட் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மொத்தம் 534 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அந்தந்த மாநில அரசுகளால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் 2015 ஆம் ஆண்டில் திரெங்கானுவில் 22 இடங்களும் 2018 ஆம் ஆண்டில் கெடாவில் 55 இடங்களும் அடங்கும். இதுதான் உண்மை. ஆக இது மத்திய அரசின் முன்மொழிவு அல்ல.

கோலாலம்பூர் 139 தளங்களைக் கொண்டுள்ளது. கெடா (55), தெரெங்கானு (22), கிளந்தான் (நான்கு), சிலாங்கூர் (72), ஜொகூர் (36), பகாங் (58), பினாங்கு (ஐந்து), பேராக் (85), நெகிரி செம்பிலான் (49), மலாக்கா (9) தளங்கள் என மொத்தம் 534 தளங்கள் உள்ளன என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset