நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவில் கலவரம்: தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க மலேசிய மாணவர் சங்கம் வலியுறுத்து

கோலாலம்பூர்:

இந்தோனேசியாவில் நீடித்து வரும் கலவரத்தை தொடர்ந்து தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க மலேசிய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இந்தோனேசியாவில் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றது. இதனால்  ஆறு பேர் உயிரிழந்ததுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்தோனேசியா, மலேசியா கல்வி அமைப்பு தினசரி நிலைமை தொடர்பான அறிக்கையை அனுப்புமாறு மலேசிய மாணவர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு மாணவரும் எப்போதும் பாதுகாப்பைப் பேணுவதையும், கலவரப் பகுதிகளில் சேரவோ அல்லது நெருங்கவோ கூடாது என்பதை உறுதி செய்யப்பட வேண்டும் அச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

முன்னதாக இந்தோனேசியாவின் பல மாவட்டங்களில் சுமார் 1,000 மலேசிய மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset