நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செப்டம்பர் பள்ளி விடுமுறைகாலத்தில் சிங்கப்பூர் - ஜோகூர் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம்

சிங்கப்பூர்:

செப்டம்பர் பள்ளி விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் ஜோகூர் பாருவுக்குள் நுழைவதால் அதிகமான போக்குவரத்தை எதிர்பார்க்கலாம். 

இம்மாதம் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அவ்வாறு இருக்கும் என்று குடிநுழைவு, சிங்கப்பூர் சோதனைச்சாவடிகள் ஆணையம் இன்று தெரிவித்தது. 

தேசிய தின வாரயிறுதியின்போது (8 ஆகஸ்ட் - 11 ஆகஸ்ட்) கிட்டத்தட்ட 2 மில்லியன் பயணிகள் நிலச் சோதனைச்சாவடிகளைக் கடந்தனர். 

சென்ற மாதம் (ஆகஸ்ட் 2025) 8ஆம் தேதி ஒரே நாளில் 558,000க்கும் மேற்பட்ட பயணிகள் கடந்துசென்றனர்.

காரில் பயணம் செய்தவர்கள் 3 மணிநேரம் வரை காத்திருக்க நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பயணத்தைத் தொடங்குதற்கு முன், நிலச் சோதனைச்சாவடிகளின் போக்குவரத்து நிலவரத்தைத் தெரிந்துகொள்வது சுமுகமான பயணத்துக்கு வழிவகுக்கும் என்று ஆணையம் கூறியது. 

போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு பயணிகள்  அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். 

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset