நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்

கோலாலம்பூர்:

சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்.

சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் இதனை தெரிவித்தார்.

ஸ்கூடாய் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்  ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலபேஸ்) பயிற்சியாளர் சம்சுல் ஹாரிஸ் கடந்த மாதம் மரணமடைந்தார்.

இவர் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை நடத்த வேண்டுமா என்பதை போலிசாரிடம் இருந்த முழுமையான இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையைப் பெற்ற பிறகு தீர்மானிக்கப்படும்.

விசாரணை குறித்து முடிவெடுப்பதற்கு முன் பல்வேறு அம்சங்களில் இருந்து ஆய்வுடன் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இது தொடர்பில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்ததும், விரைவில் எனது தரப்பினருக்கு விளக்கம் அளிக்கப்படும்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நீதி வழங்குவதற்காக, ஏஜிசி,  போலிசாத் எப்போதும் சட்டம் மற்றும் முறையான விசாரணையின் அடிப்படையில் தங்கள் கடமைகளைச் செய்யும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset