நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்

ஈப்போ:

பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

பேராக் மாநில அளவிலான 2025 தேசிய தின கொண்டாட்டத்தின் முக்கிய மேடையில்  பெண் ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.

இது தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட பெண்  மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஈப்போ மாவட்ட காவல் தலைமையக லாக்கப்பில் மாஜிஸ்திரேட் நபிலா முகமது அப்துல் வஹாப் இன்று தொடங்கி செப்டம்பர் 3 வரை தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னதாக  2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்டத்தின் போது, ​​

பிரதான மேடையில் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை அணுக முயன்ற 41 வயதான சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset