
செய்திகள் மலேசியா
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் சுதந்திர தின ஓட்டம்
கோலாலம்பூர்:
சுதந்திர தின ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க காசிங் ரேஞ்சர்ஸ் கிளப் அழைத்ததில் பெருமைப்படுகிறேன்.
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் இதனை தெரிவித்தார்.
நமது தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, தேசபக்தி மற்றும் விளையாட்டு உணர்வால் நிரப்பப்பட்ட உற்சாகமான பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்தது.
இளைஞர்கள் மற்றும் மூத்த பங்கேற்பாளர்கள் ஒன்றாக ஓடி, ஜலூர் ஜெமிலாங்கை அசைத்து, நமது அன்புக்குரிய நாட்டின் சுதந்திரத்தை ஒற்றுமையுடனும் ஆற்றலுடனும் கொண்டாடுவதைப் பார்ப்பது உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருந்தது.
இந்த மெர்டேக்கா ஓட்டத்தை வெற்றிபெறச் செய்த ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றயைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பின் தலைவர் வி.எஸ். வேல் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காசிங் ரேஞ்சர்ஸ் கிளப்பை சக்ரவர்த்தி கோபால் அவர்களால் தொடங்கப்பட்டது.
மலை ஏறுதல் மற்றும் பேட்மிண்டன் போட்டிகளில் ஆர்வம் செலுத்திய காசிங் ரேஞ்சர்ஸ் கிளப் இப்போது டார்ட்ஸ், ஓட்டத்திலும் கால் பதித்துள்ளது.
காசிங் ரேஞ்சர்ஸ் கிளப் ஹவுஸ் கட்டட நிதிக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி வருகிறோம்.
இது எங்கள் சங்கத்தின் பிரதான நோக்கம் ஆகும் என்று அவர் சொன்னார்.
அதேவேளை அதிகமான இளைஞர்களையும் கிளப்பில் இணைத்த வண்ணம் உள்ளோம்.
எதிர்காலத்தில் அவர்கள் இந்த கிளப்பை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2025, 4:11 pm
எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்
September 1, 2025, 3:45 pm
மஇகா, மசீச தேசியக் கூட்டணியில் சேர விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை: துவான் இப்ராஹிம்
September 1, 2025, 3:01 pm
உலகளாவிய பொருளாதார மறுசீரமைப்புகளும் எதிர்காலமும் ஆசிய மையில் எழுதப்பட வேண்டும்: பிரதமர்
September 1, 2025, 2:59 pm
பேரா மாநில சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு 3 நாட்கள் தடுப்புக்காவல்
September 1, 2025, 1:29 pm
ஈப்போவில் நடந்த கடை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்
September 1, 2025, 1:27 pm
சம்சுல் ஹரிஸின் மரணம் தொடர்பான விசாரணை: இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும்
September 1, 2025, 1:24 pm
நாட்டின் அமைதி, மக்களின் நலனை மையமாக கொண்டு பத்துமலையில் ஸ்ரீ காயத்ரி மகா யாகம் நடைபெற்றது
September 1, 2025, 1:23 pm