நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலானது: டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்

டுங்குன்:

எம்பிவி கார் தீயில் எரிந்து சாம்பலான சம்பவத்தில் டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர், மனைவி தப்பினர்.

டுங்குன் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ஹசன் முகமது ராம்லி ஓட்டிச் சென்ற எம்பிவி கார்,

இன்று கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை இரண்டின் டோல் நுழைவாயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது.

மதியம் சுமார் 12.15 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், வான் ஹசனும் அவரது மனைவி சிட்டி ஜலிஹா முஹம்மதும் பகாங்கின் குவாந்தானில் இருந்து டுங்குனுக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​ வாகனத்தில் இயந்திரத்தில் பிரச்சினை இருப்பதை உணர்ந்ததாக வான் ஹசன் கூறினார்.

நான் உடனே வாகனத்தின் வேகத்தைக் குறைத்தேன். வாகனத்தை நிறுத்துவதற்கு முன்பு டேஷ்போர்டில் செக் என்ஜின் விளக்கு எரிவதைப் பார்த்தேன்.

வாகனத்தை நிறுத்தியவுடன், இயந்திரத்தின் அடிப்பகுதி புகைபிடிப்பதைக் கண்ட ஒரு நெடுஞ்சாலைப் பயனர் எனக்கு உதவினார் என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset