நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கையை மாணவர்களிடம் விதைக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு: டத்தோஸ்ரீ சரவணன்

செலயாங்:

நம்பிக்கையை மாணவர்களிடம் விதைக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

துவான்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் கதை நினைவுகளை மீட்டெடுப்போம் நிகழ்வு நேற்று செலயாங்கில் நடைபெற்றது.

ஆசிரியர் விக்டர் ஒருங்கிணைப்பில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 32 வருடங்களாக துவான்கு பய்னுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், இந்நாள் ஆசிரியர்களின் இன்று ஒன்றுக் கூடி உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சி. 

கற்றோர் நிறைந்த சபையைக் காண பெருமிதமாக இருந்தது. 

இன்றைக்கு இருக்கின்ற ஆசிரியர்கள் எதிர்கால சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். 

வாழ்க்கையில் வெற்றி பெற நமக்குத் தேவை நம்பிக்கை. 

அந்த நம்பிக்கையை மாணவர்களிடம் விதைக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. 

இந்த பொறுப்புடன் மாணவர்களை சாதனையாளர்களாக ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset