நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் பாடாங் தேம்பாக் ஸ்ரீ வேட்டை முனீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா: விமரிசையாக நடைபெற்றது

கம்போங் பாடாங் தேம்பாக் ஸ்ரீ வேட்டை முனீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஆலயத்தின் தலைவர் ரகுபதி இதனை கூறினார்.

கடந்த காலங்களில் எங்களின் முன்னோர் ஒரு கல்லை காவல் தெய்வமாக வைத்து வணங்கி வந்தனர்.

அந்த கல்லின் வாயிலாக தான் இன்று வரை முனிஸ்வரர் இங்கு நிலை நிற்கிறார் என மக்கள் நம்பி வணங்கி வருகின்றனர்.

தற்போது மூன்றாவது தலைமுறையின் கீழ் ஆலயத்தின் திருப்பணிகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா  இன்று கோலாகலமாக நடைபெற்றது.

காலை முதல் ஆலயத்தில் பல சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது என்று ரகுபதி கூறினார்.

முன்னதாக இவ்விழாவில் கலந்து கொண்ட மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறியதாவது,

ஸ்ரீ வேட்டை முனிஸ்வரர் ஆலய வருடாந்திர திருவிழாவில் கலந்துக் கொண்டேன். 

ஆலய திருவிழாக்கள் நமது சமுதாயத்தின்
தனித்துவமான அடையாளத்தை நிலைநிறுத்துகின்றன. 

சமூகப் பிணைப்பை நிலைநிறுத்தும் முக்கிய நிகழ்வாக தொடர்கின்றன. 

அனைத்து பக்தர்களுக்கும் இறைவனின் அருள் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset