நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025 தேசிய தின கொண்டாட்டம் அசாதாரணமானது: ஜாஹித்

புத்ராஜெயா:

2025 தேசிய தின கொண்டாட்டம் அசாதாரணமானது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

டாத்தாரன் புத்ராஜெயாவில் இன்று 2025ஆம் ஆண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

மலேசிய மக்களின் தேசபக்தி உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இனங்கள், வயதுடைய பார்வையாளர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அவ்வகையில் இந்த கொண்டாட்டம் அசாதாரணமானது.

மேலும் இந்த நிகழ்வு மிகவும் சுவாரஸ்யமாகவும் மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்ப்பதில் வெற்றிகரமாகவும் அமைந்தது.

அனைத்து மலேசியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். 

அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அனைத்து மலேசியர்களின் ஒற்றுமையும் தொடர்ந்து வலுப்படுத்தப்படட்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset