நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

100,000 பார்வையாளர்களுடன் 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்; உற்சாகமாக நடைபெற்றன : ஃபஹ்மி

புத்ராஜெயா:

கிட்டத்தட்ட 100,000 பார்வையாளர்களுடன் 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றன.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இதனை தெரிவித்தார்.

டத்தாரான் புத்ராஜெயாவில் இன்று நாட்டில் 68ஆவது தேசிய தின கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் அணிவகுப்புகள், நிகழ்ச்சிகள்,  மக்களுக்கான வேடிக்கையான செயல்பாடுகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுடன் ஒரு கலகலப்பான சூழ்நிலையில் நடைபெற்றது.

இந்த பிரமாண்டமான நிகழ்வில் அனைத்து இனங்களையும் சேர்ந்த 100,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு பல்வேறு அரசு நிறுவனங்கள், பாதுகாப்புப் படைகள், பள்ளி மாணவர்கள், சமூக அமைப்புகள் பங்கேற்ற அதிகாரப்பூர்வ அணிவகுப்பில் மொத்தம் 14,062 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விழா மிகவும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset