நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூவின மக்களின் ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டும்; இதுவே உண்மையான சுதந்திரம்: குணராஜ்

செந்தோசா:

மூவின மக்களின் ஒற்றுமை மேலும் வலுப்பெறுவதே நாட்டிற்கான உண்மையான சுதந்திரமாகும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை தெரிவித்தார்.

நாட்டின் 68ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தேசிய விழா மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் புத்ராஜெயாவில் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக சுதந்திர தின கொண்டாட்டம் கிள்ளான் பண்டார் போத்தானிக்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போலிஸ்படை உட்பட 16 அணிகளின் அணிவகுப்புகளும் இவ்விழாவில் இடம் பெற்றிருந்தது.

குறிப்பாக பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பங்கேற்கும் வகையில் பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

நமது முன்னோர்கள் இனம், மதம் பாராமல் ஒற்றுமையாக நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்று தந்தனர்.

ஆக இந்த சுதந்திரத்தின் மகத்துவம் மக்களுக்கு குறிப்பாக அடுத்த தலைமையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இவ்விழாவின் முக்கிய நோக்கமாகும்.

மூவின மக்களின் ஒற்றுமையே நாட்டிற்கான உண்மையான சுதந்திரமாகும்.

ஆக இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset