நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 நாள் அலுவல் பயணமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சீனா சென்றடைந்தார்

தியான்ஜின்:

நான்கு நாள் அலுவல் பயணமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சீனா சென்றடைந்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2025 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வது உட்பட பல அலுவல் காரணமாக பிரதமர் சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்றடைந்தார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பிறகு அவரை ஏற்றிச் சென்ற விமானம் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டது.

சரியாக மாலை 5.27 மணிக்கு தியான்ஜின் பிஹாய் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.  

பிரதமர் வருகையை 36 பேர் கொண்ட மரியாதை அணிவகுப்பு நடத்தி சீன அரசு வரவேற்றது.

சீன விவசாய அமைச்சர் ஹான் ஜுன், தியான்ஜின் மாநாட்டின் தலைவர் வாங் சாங் சாங், மலேசியாவுக்கான சீன தூதர் ஓயாங் யுஜின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹாசன்,  உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோகே, முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டெங்கு ஸ்ப்ருல் தெங்கு அஜிஸ், பிரதமரின் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரும் சீனா சென்றுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset