நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துகாஜா கம்போங் குர்னியா அர் ரமானியா சூராவ்வில் கம்பளம் அமைக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது: சிவக்குமார்

பத்துகாஜா:

பத்துகாஜா கம்போங் குர்னியா அர் ரமானியா சூராவ்வில் கம்பளம் அமைக்கும் பணி  துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார் இதனை கூறினார்.

பத்துகாஜா நாடாளுமன்ற சேவை மையக் குழுவுடன் சேர்ந்து சம்பந்தப்பட்ட சூராவ்விற்கு சென்றேன்.

சூராவ்விம் தரையில் புதிய கம்பளம் அமைக்கும் பணி நிறைவை ஆய்வு செய்வதே இந்த வருகையின் நோக்கமாக அமைந்தது.

புதிய கம்பளம் அமைக்கப்பட்டிருப்பதால் உள்ளூர் மக்கள் இப்போது பிரார்த்தனைகளைச் செய்யலாம்.

மேலும் பல்வேறு சூராவ் செயல்பாடுகளை மிகவும் வசதியான, ஒழுங்கான சூழலில் ஏற்பாடு செய்யலாம்.

உள்ளூர் சமூகத்தின் தேவைகளை எப்போதும் கண்காணித்து வரும் பத்துகாஜா நாடாளுமன்றக் குழு காட்டிய அக்கறைக்கு சூராவ் நிர்வாகம் நன்றி தெரிவித்தது.

இந்த முயற்சி அனைத்து வழிபாட்டாளர்களுக்கும் பெரும் நன்மையைத் தரும்.

மேலும் கம்போங் குர்னியா சமூகத்திற்குள் வலுவான ஒற்றுமையை வளர்ப்பதற்கு ஒரு ஊக்கியாக செயல்படும் என்று சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset