நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புவிசார் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள மலேசியா பொருளாதார மாதிரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

புவிசார் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள  மலேசியா பொருளாதார மாதிரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை வலியுறுத்தினார்.

நேரடி உலகளாவிய போட்டி, வளர்ந்த நாடுகளால் பின்பற்றப்படும் பாதுகாப்புவாதக் கொள்கைகளில் புவிசார் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள மலேசியா தனது பொருளாதார மாதிரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உலகளாவிய பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது போட்டித்தன்மையுடன் நாடு இருக்க வேண்டும்.

அதற்கு உயர் மதிப்பு, புதுமை சார்ந்த பொருளாதார மாதிரியை நோக்கி மாற வேண்டும் என்று அவர் கூறினார். 

ஏனெனில், குறிப்பாக விரைவான புவிசார் அரசியல் மாற்றத்தின் சூழலில், வழக்கம் போல் வணிகம் அணுகுமுறையைத் தொடர்வது ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

கடந்த 50 ஆண்டுகால பொருளாதார மாதிரி நாட்டிற்கும் நம் அனைவருக்கும் பயனளித்துள்ளது.

ஆனால் அது எதிர்காலத்திற்கு ஏற்புடையதாக இருக்குமா என்பது தான் கேள்விக் குறி என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset