நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தைகளுடனான பாலியல் வீடியோக்களை படம் பிடித்து விற்ற காமுகன் கைது: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

குழந்தைகளுடனான பாலியல் வீடியோக்களை படம் பிடித்து விற்ற காமுகனை போலிசார் கைது செய்துள்ளனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை உறுதிப்படுத்தினார்.

இரண்டு மாத குழந்தைகள் உட்பட குழந்தைகள் வணிகப் பொருட்களைப் போல வாங்கப்படுவது மட்டுமல்லாமல், வக்கிரமான திருப்திக்காகவும் பயன்படுத்தப்படுகிறார்கள்.

பின்னர் அவை படமாக்கப்பட்டு இருண்ட வலைப் பக்கங்களில் விநியோகிக்கப்படுகின்றன.

கடந்த ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 19 வரை பாலியல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு, மலேசிய குழந்தைகளுக்கு எதிரான போலிஸ் துறை, பெண்கள்,  குழந்தைகள், சர்வதேச நிறுவனங்கள் இணைந்து பல சோதனைகளை நடத்தின.

ஓப்ஸ் பெடோ என்ற சோதனையில் இறுதியாக அம்பலப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை பாலியல் கும்பலின் அருவருப்பான செயல்பாடுகள் கண்டறியப்பட்டது.

இதில் ஜூலை 19ஆம் தேதி ஜொகூர்பாருவில் கைது செய்யப்பட்ட 29 வயது உள்ளூர் தொழில்நுட்ப வல்லுநர் இதில் முக்கிய சந்தேக நபராக உள்ளார். 

தனது காம இச்சையைத் திருப்திப்படுத்துவதற்காக குழந்தைகளை பாலியல் ரீதியாக பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், ஓரினச்சேர்க்கை செய்தல், லாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பாலியல் துஷ்பிரயோகத்தைச் செய்ததாக அவர் கூறினார்.

இரண்டு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான இரண்டு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுடனான அனைத்து மோசமான காட்சிகளும் டார்க் வெப்,  டெலிகிராம் செயலியில் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அந்நபரின் வாடிக்கையாளர்களில் உள்ளூர், அனைத்துலக அளவில் இருந்து வந்தவர்கள் இருப்பதாக டத்தோ குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset