நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த வாரம் சிகாமட்டில் ஆறாவது முறையாக நிலநடுக்கம்: இன்று காலை மீண்டும் 2.7 ரிக்டர் அளவிலான அதிர்வுகள் பதிவானது

சிகாமட்:

சிகாமட்டில் இந்த வாரம் மட்டும் ஆறாவது முறையாக  நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அதிவாகியுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட் மலேசியா) இதனை உறுதிப்படுத்தியது.

இன்று காலை 7.29 மணிக்கு செகாமட்டில் 2.7 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது வாரம் முழுவதும் மாவட்டத்தைத் தாக்கிய தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.

சிகாமட்டில் இருந்து வடமேற்கே சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 2.5° வடக்கு, 102.8° கிழக்கில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டது.

சிகாமட்டைச் சுற்றி நிலநடுக்கங்கள் உணரப்பட்டிருக்கலாம். ஆனால் இதுவரை எந்த சேதமும் பதிவாகவில்லை.

மெட் மலேசியா நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று அது ஓர் அறிக்கையில் கூறியது.

முன்னதாக நேற்று அதிகாலை 4.24 மணிக்கு ஜொகூரிலும் ஒரு சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டது.

இது செகாமட் பகுதியில் தொடர்ச்சியான நில அதிர்வு நடவடிக்கைகளில் மற்றொரு சம்பவத்தைக் குறிக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset